சசிகலா பொதுச்செயலாளர் பதவி செல்லாது…பதவி காலியாக உள்ளது: ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளதாக முதல்வர் ஓபிஎஸ் அறிவித்திருப்பது அதிமுக வட்டாரங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முதல்வர் பன்னீர்செல்வம் பச்சைத் துரோகி, அவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்னமும் முறைப்படி அதிமுக பொதுச்செயலர் தேர்வு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அப்பதவி காலியாக உள்ளது என்றும் கட்சி விதிப்படி பொதுக்குழு உறுப்பினர்களுடன் பொது உறுப்பினர்களும் சேர்ந்துதான் பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

தற்போது சசிகலா தற்காலிக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவிதிகளின் படி இடைக்கால அல்லது தற்காலிக பொதுச்செயலரை நியமிக்க முடியாது.

இதற்கு அதிமுக கட்சி விதிகளில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியிருந்ததன.

இந்நிலையில் பன்னீர்செல்வமும் அதிமுக பொதுச்செயலர் பதவி காலியாக இருப்பதாக அறிவித்திருப்பது, சசிகலாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.