மன்னார்குடி பஸ்ஸிலிருந்து தப்பிப் பிழைத்த எம்எல்ஏ ஒருவர் ஓபிஎஸ் வீட்டுக்கு ஓடிய சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு முதல்வர் பன்னீர் செல்வம் தீடீரென்று பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அது, தமிழகத்தில் முதல்வராவதற்கு சசிகலா பெரும் முயற்சி எடுத்து வருவதாகவும், தன்னை மிரட்டி தான் அவர்கள் ராஜினாமா செய்ய வைத்தனர் என்று கூறியிருந்தார்.
இதனால் தமிழகத்தில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சசிகலா தரப்பில் அதிமுக-எம் எல் ஏக்கள் யாரும் ஓபிஎஸ் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக மன்னார் குடி கும்பல் அதிரடி திட்டத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, எம் எல் ஏக்களிடம் இருக்கும் அனைத்து செல்போன்களையும் மன்னார்குடி தரப்பு பறிமுதல் செய்து வைத்துள்ளதாகவும், ஒரு எம்எல்ஏவுக்கு நான்கு அடியாட்களை அவர்கள் நியமித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இதனால் எம்எல்ஏக்கள் அனைவரையும் மன்னார்குடி கும்பல் சிறைபிடித்து ஒரு சொகுசு பேருந்தில் சுமார் 3 மணி நேரம் மெரினா கடற்கரையை சுற்றியுள்ளது. அதன் பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு கிரீன்வேஸ் சாலைக்கு பேருந்து சென்றுள்ளது.
அப்பகுதியில் தான் பன்னீர்செல்வத்தின் வீடும் உள்ளது. எடப்பாடி வீட்டின் அருகே பேருந்து நின்ற போது எம் எல் ஏக்கள் அனைவரும் எடப்பாடி வீட்டினுள் சென்று கொண்டிருந்த போது எம்எல்ஏ சண்முகநாதன் அங்கிருந்தவர்கள் கண்களில் மண்ணை தூவி யாருக்கும் தெரியாமல் ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஓபிஎஸை சந்தித்த அவர் தனது ஆதரவை தெரிவித்தார்.
இதைக் கண்ட மன்னார்குடி கும்பல் காலை முதல் பிற்பகல் வரை எம்எல்ஏக்களை பாதுகாப்பாக அழைத்து வந்தது, ஒபிஎஸ் வீட்டிற்கு செல்வதற்காகவா நாம் செய்தோம் என்று புலம்பி வருவதாக கூறப்படுகிறது.