இது போருக்கான நேரம் என்றும் போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்ற பின்பு பல்வேறு நாடுகள் விழிப்புடன் உள்ளன. ஏனெனில் டிரம்ப் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் எதேனும் ஒரு நாட்டிற்கு பாதகமாக வந்து விடுகிறது.
இதனால் சீனா கடந்த சில வாரங்களாக போருக்கு தேவையான சிறப்பு போர் கப்பல்கள் உருவாக்குதல் மற்றும் இராணுவப் படைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளித்தல் என்று போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தன் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் Sergey Shoigu க்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து Sergey Shoigu கூறுகையில், ஒரு யுத்ததிற்கு விமானப்படைகள் அனைத்திற்கு சிறப்பு பயிற்சி அளித்து தயார் நிலையில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் வான் பாதுகாப்புபடைகள் போன்றவைகளை அதிக அளவில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இது தொடர்பாக ஆயுதப்படை தளபதியிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர் வான் பாதுகாப்பு படைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
இதற்காக அப்படைகளில் உள்ளவர்களுக்கு வெவ்வேறு விதாமாக பயிற்சி அளித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் எந்நேரமும் இராணுவம் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே புடின் தன் இராணுவப் படைகளை வலிமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார். புடினின் இந்த அதிரடி முடிவிற்கு காரணம் Nato நாடுகளின் அழுத்தம் தான் என்று கூறப்படுகிறது.
வான் படைகள் மட்டுமின்றி தரைப்படைகளுக்கும் தொடர்ந்து பயிற்சி கொடுத்து, அவர்களையும் மேம்படுத்தி வருமாறு புடின் கூறியுள்ளதாக Sergey Shoigu தெரிவித்துள்ளார்.