சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா முஸ்லிம்களின் புனித தலமாகும். இங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்கு நேற்று முன்தினம் இரவு 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார்.
திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதைப் பார்த்த யாத்ரீகர்கள் மற்றும் போலீசார் பாய்ந்து சென்று அவரை தடுத்து காப்பாற்றினர்.
விசாரணையில் அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இத்தகவலை பெரிய பள்ளிவாசல் போலீஸ் செய்தி தொடர்பாளர் மேஜர் சமேக் அல்-சலாமி தெரிவித்தார். முன்னதாக அந்த நபர் அங்குள்ள திரைச்சீலைக்கு தீவைக்க முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறினார்.