சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் இருந்து நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களை நீக்க வேண்டும் என்று பங்குதாரர்கள் கூறிவருகின்றனர்.
2012-ம் ஆண்டு முதல் இயக்குனர்கள் குழுவில் உள்ள ஜுக்கர்பெர்கினை நீக்கிவிட்டுச் சிறந்த நிறுவன ஆளுமை மற்றும் பங்குதாரர் சார்பு செயற்திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்பதற்கு ஏற்றவாறு ஒரு தலைவரை மாற்ற இருப்பதாக வெஞ்சர்பீட் அறிக்கை கூறுகின்றது. இதற்கான விதையைச் சம்ஆப்அஸ் என்ற பங்குதாரர்கள் குழுவே எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இரண்டு பொறுப்புகள் ஒருவரிடமே இருப்பது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், பங்குதாரர்களின் மதிப்பைப் பாதிக்கும் என்றும் வெஞ்சர்பீட் கூறியுள்ளது.
இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.ஈ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மிகப் பெரிய முடிவை எடுக்கக் காரணம் மிகப் பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இப்போது நட்டம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இரண்டு பொறுப்புகள் ஒருவரிடமே இருப்பது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், பங்குதாரர்களின் மதிப்பைப் பாதிக்கும் என்றும் வெஞ்சர்பீட் கூறியுள்ளது.
மேலும் ஒற்றைக் குழு தலைமை பேஸ்புக் நிறுவனத்தில் இருப்பதினால் தவறாக வழிநடத்தும் செய்தி, தணிக்கை, வெறுக்கத்தக்கப் பேச்சு, பேஸ்புக் பயன்பாட்டில் கூறப்படும் குறைபாடுகள், சமூக வரையறைகளைப் வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளடக்கக் கொள்கைகளால் பெரிதளவில் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.