கர்ப்ப காலத்தில் முட்டை, ஈரலை தவிர்ப்பது நல்லது

உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் உயிரைப் பாதுகாக்க கூடியது. அனைத்து உணவுகளும் ஒவ்வொரு சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. விட்டமின் ஏ, கண்பார்வைக்கும், தசைவளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையானது. இதை அதிகமாக உட்கொண்டால் கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கிவிடும். உடல் வளர்ச்சி அதிகமாகும் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை.

முட்டை மற்றும் ஆட்டின் இறைச்சியில் உள்ள ஈரல் பகுதிகளில் அதிகமாக விட்டமின் ஏ உள்ளது. ஆனால் இவற்றை கர்ப்பிணிகள் அறவே தவிர்த்துவிடுதல் நல்லது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்ப கால கருவை கலைத்துவிடும். விலங்கு மற்றும் இறைச்சியால் வரும் விட்டமின் ஏ மிகவும் ஆபத்தானது.

அதற்காக உயிர்ச்சத்து ஏ என்பது வேண்டவே வேண்டாம் என்று கூறவில்லை. பழங்கள் மற்றும் பால் பொருட்களால் கிடைக்கும் உயிர்ச்சத்து மிகவும் நல்லது. இந்த ஏ விட்டமின் குழந்தைக்கு கொடுக்கவில்லை என்றால் கண்பார்வை பாதிப்பாகும்.

எனவே கர்ப்பிணிகளுக்கு முடிந்தவரை பழங்கள், இயற்கை பச்சைக் காய்கறிகளையே அதிகமாக கொடுங்கள். மருத்துவரை ஆலோசனை செய்து கொண்டே இருங்கள்.