அதாவது, சத்துகள் நிறைந்தது ‘கேரட்’ என்று நமக்குத் தெரியும். ஆனால் அது, புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் ஆகிறது என்று தற்போது ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட கேரட்டில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, கே மற்றும் பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம், தையமின் போன்ற சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
நமது உடல்நலத்துக்குத் தேவையான சத்துகள் அனைத்தையும் கேரட் கொண்டுள்ளது. எனவே இதை நாம் உணவில் அதிகமாகச் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சினைகளும் நம்மைத் தாக்காமல் தடுக்கலாம்.
கேரட் அதிகம் சாப்பிட்டால் மார்பகம், கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது.
காரணம், கேரட்டில் பால்கரினால் எனப்படும், புற்றுநோய்ச் செல்களை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நமது கண்களில் உள்ள ரெட்டினாவின் செயல்பாட்டுக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால், இச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது.
கேரட்டில் கரோட்டினாய்டு சத்து அதிக அளவில் உள்ளதால், கேரட்டை அதிகம் சாப்பிடுவோருக்கு, இதயநோய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
எனவே கேரட்டை தொடர்ந்து தினமும் சாப்பிட்டுவந்தால், நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, பக்கவாதம், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, முகப்பருக்கள் மற்றும் சொத்தைப் பற்கள் ஏற்படுவதைத் தடுக் கிறது என்று பல ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.