வெள்ளரிக்காயில் இப்படி ஒரு ஆபத்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்களைக் கொண்ட வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி கேள்விபட்டிருப்போம்.

ஆனால் அதை சாப்பிடுவதால், நமக்கு ஒருசில பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • வெள்ளரிக்காயில் உள்ள விட்டமின் C நன்மையாக இருந்தாலும், அது அளவுக்கு அதிகமாகும் போது, நமது உடம்பின் செயல்பாட்டுக்கு எதிர்மறையாகி, நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.
  • நமது உடலில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாகும் போது, சிறுநீரக கல், அடிவயிறு வீக்கம், அழற்சி, முகப்பருக்கள் இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் வெள்ளரிக்காயில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.
  • நீர்ச்சத்துக்கள் அதிகமாக கொண்டுள்ள வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொண்டால், இதய அழுத்தம், ரத்த நாளங்களில் அடைப்பு, சுவாசப் பிரச்சனை மற்றும் அடிக்கடி கடுமையான தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • விவசாயம் செய்யும் போது, வெள்ளரிக்காயில் பூச்சிக்களின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, பூச்சிக் கொல்லி மருந்துக்களை பயன்படுத்துவார்கள். அதனால் சிலருக்கு ஒவ்வாமை போன்ற அலர்ஜிகள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படும்.
  • கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படுவதுடன், வயிற்றில் வலியையும் ஏற்படுத்தும்.