முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு மேலும் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தால் அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவால் முதல்வராக முடியாத நிலை உருவாகும்.
தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் கட்சிகளின் பலம் விவரம்:
அதிமுக கூட்டணி: 136
அதிமுக – 133
கொங்கு இளைஞர் பேரவை-1
மக்கள் ஜனநாயக கட்சி- 1
முக்குலத்தோர் புலிப் படை-1
ஜெயலலிதா நீங்கலாக மிச்சமுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை- 135
தற்போது சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 129
முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அவருக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 6
ஆகையால் தற்போதைய நிலையில் மேலும் 13 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தந்துவிட்டால் சசிகலாவால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அவரால் முதல்வராக முடியாது. தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு கவிழும் நிலை உருவாகும்.