யாரு துரோகி.. சசிகலாவுக்கு டிவீட்டரில் ஓ.பி.எஸ். கொடுத்த “நச்” அடி!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படத்தைப் போட்டு அதில் துரோகி என பதிவிட்டுள்ளனர். அதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் துரோகிகள் யார் என மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே நடைபெற்று வரும் முதலமைச்சர் நாற்காலிக்கான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றனர்.

டிவி, இன்டர்வியூ, அறிக்கை என தொடர்ந்த மோதல் தற்போது டிவிட்டர் வரை வந்துள்ளது. சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக இணையதளத்தில் முதல்வர் ஓபிஎஸின் படத்தை போட்டு #துரோகி என பதிவிட்டிருந்தனர்.

இதற்கு ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அம்மாவின் உண்மை தொண்டன் துரோகியா?

 

மக்கள் முடிவு செய்வார்கள் யார் துரோகிகள் என்று என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சசிகலாவுக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகள் குவிந்தன. இதனால் அந்த டிவிட் டெலிட் செய்யப்பட்டது.