ஓ.பி.எஸ் -கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் போராட்டம்? பொலிஸ் குவிப்பு!!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிராகவும் போராட இளைஞர்கள் சென்னை மெரினாவில் திரள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவுக்கும், ஆட்சிக்கும் அடுத்து ஓ.பன்னீர்செல்வமா? சசிகலாவா என்ற மிக பெரிய கேள்வி தற்போது தமிழக அரசியலில் ஏற்ப்பட்டுள்ளது.

அதிக எம்.எல்.ஏக்கள் கொண்டவர்கள் தான் மெஜாரிட்டையை நிரூபிக்க முடியும் என்ற நிலையில், தமிழக மக்களின் பேரதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு தான் என்பது கண் கூடாக தெரிகிறது.

சமூகவலைதளங்களிலும் இளைஞர்களின் ஆதரவு அவருக்கு பெருகி வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் போராடி வெற்றி பெற்ற இளைஞர்கள் கூட்டம், ஓ.பி.எஸ்கு ஆதரவாக போராட உள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மெரினாவில் தற்போது பொலிஸ் படை குவிக்கப்பட்டுள்ளது