இன்று வெளியான சிங்கம் 3 படம் ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் பலமுறை தள்ளிப்போய் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை திருட்டு விசிடிகளில் பார்க்காமல் தியேட்டர்களுக்கு சென்று பார்க்குமாறு சூர்யா ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் படம் ரிலீஸான சிறிது நேரத்தில் பல காட்சிகளை தமிழ் ராக்கர்ஸ் லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளது. இதனால் திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
படத்தை லைவ் ஸ்ட்ரீம் செய்தால் உங்களை சிறையில் தள்ளுவேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சொன்ன வார்த்தைய அரசியல்வாதிகள் காப்பாற்றுகிறார்களோ இல்லையோ, தமிழ் ராக்கர்ஸ் காப்பாற்றி விட்டது…
அடப்பாவிகளா… இது போன்ற செயல் திரையுலகிற்கு நல்லது அல்ல.