மருத்துவமனையே கதி என்று இருக்கும் தனுஷின் வில்லி!

பாலிவுட் நடிகை கஜோலின் தாய் மற்றும் மாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகை கஜோல் தனுஷின் விஐபி2 படத்தில் நடிக்கிறார். அவரது மாமியார் வீணாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் இருந்து அவரை கவனித்து வந்தார் கஜோல். தாய் கஜோலின் தாய் தனுஜாவுக்கு சர்க்கரை அளவு கூடுவதும், குறைவதுமாக ஆனதால் அவரும் வீணாவை அனுமதித்துள்ள அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஜய் கஜோலின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து தங்கி தாயை கவனித்துக் கொள்கிறார். கஜோல் பகல் நேரத்தில் கஜோல் மருத்துவமனையில் இருந்து தாய் மற்றும் மாமியாரை கவனித்து வருகிறார்.

இருவரும் ஒரே வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம். பாலிவுட் கஜோலின் தாயும், மாமியாரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக பாலிவுட் பிரபலங்கள் அவருக்கும், அஜய்க்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.