பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த போது, அவருடைய நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் அபுஹனி அல்மஸ்கி.
இவர், ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா படைகளுக்கு பயிற்சி கொடுக்கும் தளபதியாக செயல்பட்டு வந்தார்.
தற்போதைய அல்- கொய்தா தலைவர் அல்சவுஹாரிக்கும் இவர் நெருக்கமானவராக இருந்தார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய இவர் சிரியாவில் அல்-கொய்தா படையினருடன் சேர்ந்து தாக்குதல் நடத்தி வந்தார்.
தற்போது சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், இத்லிப் என்ற இடத்தில் அல்-கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது அமெரிக்க படைகளுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அந்த இடத்தை குறிவைத்து 2 தடவை விமானம் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், அவர்கள் தங்கி இருந்த இடம் வெடித்து சிதறியது. இதற்குள் சிக்கி இருந்த 11 அல்-கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் அபுஹனி அல்மஸ்கினியும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை அமெரிக்க ராணுவ தளபதி ஜெப்டேவிஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.