பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே வெற்றிப்பெற்றுள்ளார்.
இதன் மூலம் தெரேசா மே, புதிய விதிகள் மற்றும் உட்பிரிவு 50 மசோதா திருத்தங்களை முன்நிறுத்தி பிரித்தானியா வெளியேறும் செயல்முறையை தொடங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரித்தானியா வெளியேறும் சட்டவரைவுக்கு ஒப்புதல் அளித்து 494 பேர் வாக்களித்துள்ளனர். எதிராக 122 பேர் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் 372 வாக்குகள் பெருன்பான்மையுடன் இறுதி கட்டமாக சட்டவரைவு பிரபுக்கள் அவையில் விவாதிக்கப்படவுள்ளது.
ஒப்புதல் பெறப்படும் நிலையில் வருகிற மார்ச் மாத இறுதியில் முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.