1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் டிங்கோ சிங் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மத்திய விளையாடு அமைச்சகம் உதவி வருகிறது.
அவருக்கு கம்பீரும் உதவ முன்வந்துள்ளார். ஆனால் அந்த உதவி குறித்து வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். சிறந்த குத்துச்சண்டை வீரரான டிங்கோசிங்குக்கு உதவ எல்லோரும் முன்வர வேண்டும் என்றும் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.