இலங்கை டி20 அணியில் மலிங்கா: ஒரு வருடத்திற்குப் பிறகு இடம்பிடித்தார்

இலங்கை அணி இந்த மாதம் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் லசித் மலிங்கா இடம்பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டனாக இருந்த தினேஷ் சண்டிமல் நீக்கப்பட்டுள்ளார். உபுல் தரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்குப்பின் இலங்கை அணியில் மலிங்கா இடம்பெறவில்லை. அதன்பின் டிசம்பர் மாதம் காயத்தில் இருந்து மீண்ட மலிங்கா, டெங்கு காய்ச்சலால் அவதிபட்டார். அதன்பிறகு தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார். சுமார் ஒரு வருட காலத்திற்குப் பிறகு களம் இறங்க இருக்கிறார் மலிங்கா.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1.  உபுல் தரங்கா (கேப்டன்), 2. நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்). 3. குணரத்னே, 4. குஷால் மெண்டிஸ், 5. மிலிந்தா ஸ்ரீவர்தனா, 6. சசித் பதிரனா, 7. சமரா கபுகேதரா, 8. சீகுகே பிரசன்னா, 9. நுவான் குலசேகரா, 10. இசுரு உடானா, 11. தசுன் ஷனகா, 12. லக்சன் ஷன்டகன், 13. லசித் மலிங்கா, 14. விகும் சஞ்ஜெயா.