சவுந்தர்யாவின் இயக்கத்தை புகழ்ந்து தள்ளிய விவேக்!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தில் நடித்த தனுஷ், அமலாபால், சமுத்திரகனி, விவேக் உள்ளிட்டோர் தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்கள். இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாகி வருகிறது. தற்போது தனுஷ் மற்றும் விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் சவுந்தர்யாவின் இயக்குனர் திறமையை பார்த்து வியந்து, அவர் குறித்து விவேக் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், சவுந்தர்யா சுறுசுறுப்பாகவும், வேகமாகவும், உன்னிப்பாக கவனித்து விரைந்து முடிக்கக்கூடிய திறமையுடன் இருக்கிறார். அவரது கூர்மையான கண்கள் இமைத்துக் கொண்டே இருக்கிறது. கைகள் ஸ்டைலாக அங்கும் இங்கும் செல்கிறது. அவரது அப்பாவைப் போல் இவர் மீதும் நம்பிக்கை ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதற்கு சவுந்தர்யா ரஜினிகாந்த், உங்களைப் போன்ற மூத்த அனுபவமுள்ள கலைஞர்களிடமிருந்து பாராட்டு வருவது எனக்கு மிகப்பெரிய விஷயம். உங்களுக்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.