தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கையளவு
துருவிய தேங்காய் – 1/4 கப்
பொடித்த வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை :
* பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு வேகவைத்து கொள்ளவும்.
* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.
* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ராகி கொழுக்கட்டை ரெடி!!!