அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பற்றி பேசி தனது நேரத்தை தரத்தையும் குறைத்து கொள்ள விரும்பவில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று ராஜ்பவனில் சந்தித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் பன்னீர் செல்வத்திற்கு பின்னால் திமுக தான் உள்ளது என்று சசிகலாவின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “சசிகலாவின் கருத்திற்கெல்லாம் பதில் கூறி எனது நேரத்தையும், எனது தரத்தையும் குறைத்து கொள்ள விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.