தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக ஆட்சி நிர்வாகம் நடைபெறவில்லை என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்த பின்னர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது கடந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது அப்போது 2 மாதங்கள் ஆட்சி நிர்வாகம் சரிவர இயங்கவில்லை.
அதேப்போல ஜெயலலிதா மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். அதன் பின்னர் ஜெயலலிதா டிச.5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்று 2 மாதங்களில் அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் எப்படி ஆட்சி நடைபெறுகிறது என்று பத்திரிகையாளர்களாகிய நீங்களே தெரிந்து கொள்ளலாம். இதனை நீங்கள் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்து சொன்னால் உங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவிக்க கடமை பட்டிருக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.