ஆர்யா படத்தை முந்திய ஜெயம் ரவி படம்!

தமிழ் சினிமாவில் இது காட்டு சீஸன் போல… முதலில் ஆர்யாதான் ஆரம்பித்து வைத்தார். மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவா இயக்கத்தில் கடம்பன் படத்தில் நடிக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய ஷூட்டிங் ஆண்டு இறுதியில்தான் முடிந்தது.

இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் படம் ஏப்ரலில் வந்து விடும் என்கிறார்கள். ஆனால் ஜெயம் ரவி நடிக்க விஜய் இயக்கி இருக்கும் வனமகன் படம் மார்ச்சிலேயே வந்து விடும் போல… வனமகன் ஷூட்டிங் தொடங்கியதே கடந்த ஆண்டு இறுதியில் தான்.

இரண்டும் ஒரே ஜானர் தான் என்றாலும் வெவ்வேறு கதைகளாம்.

கமலுக்கு எதிரி ஆகும் பீட்டா கடம்பன் எமோஷனல் கலந்த சோஷியல் படமாகவும், வனமகன் ரொமாண்டிக் படமாகவும் இருக்குமாம். ஆர்யா உங்களை விட லேட்டா வந்தாலும் சீக்கிரமா பிக்கப் பண்ணிட்டார் போல ஜெயம் ரவி?