சிங்கம்-3 பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினிக்கு பிறகு பெரிய மார்க்கெட் கொண்டது சூர்யா தான் என ஞானவேல்ராஜா கூறினார். அவர் கூறியபோது பலரும் அதை எதிர்த்தனர்.
ஆனால், அவை தற்போது நிரூபணம் ஆகிவிட்டது, ஆம், சிங்கம்-3 தமிழகத்தில் இரண்டு நாள் முடிவில் ரூ 11 கோடி வசூல் செய்துள்ளது.
இவை மிக குறைவு என்றாலும், சூர்யாவின் தெலுங்கு மார்க்கெட் இப்படத்தை எங்கோ கொண்டு சென்றுள்ளது. தெலுங்கில் இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ 14 கோடி வசூல் செய்துள்ளது.
கேரளாவில் ரூ 4 கோடி மற்ற மாநிலங்கள் சேர்த்து ரூ 35 கோடி வரை இந்தியாவில் மட்டும் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் எப்படியும் ரூ 45 கோடி வசூலை தாண்டியிருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும், இன்றும் நாளையும் அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் என்பதால், எப்படியும் 5 நாட்களுக்கும் S3 ரூ 100 கோடி கிளப்பில் இணைவது உறுதி.