தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை: ராதிகா ஆப்தே புகார்

ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி இது…

“தென் இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்குத்தான் மதிப்பு. அவர்களுக்குத்தான் நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு கொடுப்பார்கள். நடிகைகளுக்கு சாதாரண ஓட்டல் ரூம்தான்.

நடிகர்கள் எவ்வளவு தாமதமாக வந்தாலும் எதுவும் கேட்க மாட்டார்கள். ஆனால் நடிகைகள் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அங்கு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இது மாதிரி நிறைய வி‌ஷயங்கள் நடக்கும். இதனால் நான் பாதிப்பு அடைந்திருக்கிறேன்.

‘கபாலி’ படம் தவிர வேறு எந்த படத்திலும் தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை. ரஜினியும் ‘கபாலி’ பட இயக்குனர் ரஞ்சித்தும் மட்டுமே என்னை மதித்தார்கள். அதற்காக எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை. நான் நடித்த படங்களில் பணியாற்றிய அனுபவங்களை வைத்தே இதை சொல்கிறேன்”.