ஜனாதிபதியை நெருங்க முயற்சித்த மர்மநபர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் அனுமதியின்றி பிரவேசிக்க முயற்சித்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் வாசஸ்தலப் பாதுகாவலர்களால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை அண்மையில் மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவிருந்த தினத்திற்கு முன்தினம் கைத்துப்பாக்கியுடன் நடமாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.