கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
தமது சொந்த இடங்களை விடுவிக்க கோரி கடந்த 11 நாட்களாக தொடர்ந்து போராடிவரும் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.