ஐ.தே.கட்சிக்கு தாவும் சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, அனுரபிரிதர்ஸன யாப்பா மற்றும் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.தே.கட்சிக்கு தாவும் சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள்

தற்போதுள்ள நிலைமையில் தமது மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு வர முடியாத நிலைமை காணப்படுவதாக இந்த அமைச்சர்கள் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் அரசியலில் இருந்து விலகுவது அல்லது வேறு அரசியல் முடிவை எடுக்க நேரிடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே நிமால் சிறிபால டி சில்வா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தால், அந்த கட்சியின் பதுளை மாவட்ட தலைவரான ஹரின் பெர்னாண்டோ கம்பஹா மாவட்டத்திற்கு மாற்றப்படுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் வெளியாகியுள்ள இந்த செய்தி தொடர்பில் இந்த அமைச்சர்கள் உத்தியோகபூர்வமாக எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.