ஜப்பானின் காமிக் கலை பிரபலம் ஜரோ தனிகுசி காலமானார்

ஜப்பானின் பிரபல மங்கா என்ற நகைச்சுவை கலை பிரபலம் ஜரோ தனிகுசி தனது 69 வயதில் நேற்று காலமானார். ஜரோ  தனிகுசி உயிரிழப்பு குறித்த தகவலை பிரான்சில் உள்ள அவரது பதிப்பாளரான கேஸ்டர்மேன் என்பவர் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் உள்ள கேஸ்டர்மேன் தனது வலைதளத்தில் இதனை பதிவு செய்துள்ளார். அதில் காலமான ஜரோ தனிகுசியின்  குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது உயிரிழப்பு குறித்த மற்ற தகவல்கள் ஏதும் இல்லை.

ஜரோ தனிகுசி தி வாக்கிங் மேன், தி சம்மிட் ஆஃப் த காட்ஸ், தி மேஜிக் மவுண்டெயின் உள்ளிட்ட உலகின் பிரபலமான பல  நகைச்சுவை காமிக் படங்களை உருவாக்கியுள்ளார்.

இவரது கைவண்ணத்தில் உருவாகிய ஒவ்வொரு காமிக்கும் பிரான்சில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.