நாடு கடத்தப்பட்ட மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாலைத்தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள்ஜனாதிபதி நஸீட் நாடு கடத்தப்பட்டார்.
தற்போது அவர் லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை இன்று சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.