கேரள கஞ்சாவுடன் யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கடல் வழியாக படகு ஒன்றில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சாவுடனே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக ஏனைய மாவட்டங்களுக்குக் கேரள கஞ்சா கடத்தல் நடப்பதாக
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை தொடர்ந்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.