இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர். அஸ்வின். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் இன்று அவர் முஷ்பிகுர் ரகீம் விக்கெட்டை கைப்பற்றினார். இது அவருக்கு 250-வது விக்கெட் ஆகும். 45-வது டெஸ்டில் அவர் 250-வது விக்கெட்டை எடுத்தார்.
இதன் மூலம் அஸ்வின் குறைந்த டெஸ்டில் 250 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். இதற்கு முன்பு டென்னிஸ் லில்லி (ஆஸ்திரேலியா) 48 டெஸ்டில் 250 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருநத்து. இதை அஸ்வின் முறியடித்து அதிவேகத்தில் 250 விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்தார்.