இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் புலம்பெயர் இலங்கையர்கள், தாய் நாட்டின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டிற்கு சிறப்பாக உதவ முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஐ.நாவிற்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெனிவாவிலுள்ள, இலங்கையின் ஐ.நா தூதரகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சிகளின் பொது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க மேம்பாட்டிற்கும், அபிவிருத்தியிற்கும் புலம்பெயர் இலங்கையர்கள், சிறப்பாக உதவ முடியும்.
மேலும் இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்றுவதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அதிகளவிலான ஈடுபாட்டை வெளிப்படுத்த முடியும்.
அத்தோடு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமானது நிலைபேறான சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இலங்கையில் வறுமை ஒழிப்பு செயற்பாடுகளுக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்கு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.