நீங்க எந்த பத்திரிக்கை ?… ஜெயலலிதா, விஜயகாந்த் பாணியில் மிரட்டிய சசிகலா!!

கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது முறையாக நேரில் சந்தித்து பேசப்போன சசிகலா, செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். நீங்க எந்த பத்திரிக்கை என்று எரிச்சலாகவும், கோபத்துடனும் கேட்டார்.

கடந்த ஒரு வார காலமாகவே தமிழக அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே குடும்பமாக இருந்த அதிமுகவினர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு குவியும் ஆதரவு சசிகலா ஆதரவு வட்டத்தை கலக்கமடையச் செய்துள்ளது. அதே நேரத்தில் தன்னிடம் இருக்கும் எம்எல்ஏக்களை தக்க வைக்க வேண்டுமே என்ற பதற்றத்தில் கூவத்தூருக்கு ஓடிக்கொண்டிருக்கிறார் சசிகலா.

அதிமுக எம்எல்ஏக்கள்
கல்பாக்கம் அருகே கூவத்தூரில் 90 அதிமுக எம்.எல்.ஏக்களை மன்னார்குடி குண்டர்கள் கட்டுப்பாட்டில் சசிகலா சிறை வைத்துள்ளார். கூவத்தூர் ரிசர்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று சொன்னாலும் முகத்திலும், மனதிலும் ஒருவித பயம் குடியேறியிருப்பதை பார்க்க முடிகிறது. பெரும் போராட்டத்திற்குப் பின்னர் கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சசிகலா பேச்சு
செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களின் சிறு குழந்தைகளை கடத்துவோம் என மிரட்டல் விடுக்கின்றனர். உறவினர்களிடம் கூறி பத்திரமாக பார்த்துக்கொள்ளச் சொல்லி விட்டு வந்திருப்பதாக கூறினார்கள்.

பொய் செய்திகள்

எம்.எல்.ஏக்கள் தொடர்பாக பொய் செய்திகள் பரப்புவது யார் என்பது எங்களுக்குத் தெரியும். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்போது வரட்டும். வருவதற்கு முன்னரே ஏன் பேசவேண்டும் என்று கேட்டார் சசிகலா.

நானும் உங்களைப் போலத்தான்
ஆட்சி அமைக்க கவர்னரின் அழைப்பு கால தாமதம் ஆவதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் சொன்ன சசிகலா, உங்களை போல் தான் நானும் நினைக்கிறேன் இதற்கு என்ன காரணம் என்று ஊரறிய தெரிந்து கொண்டு இருக்கிறது. உங்களுக்கும் தெரியும் என்றார். .

யார் என்பது தெரியும்
சசிகலா ஆட்சி அமைக்க சாத்தியமில்லை என ஆளுநர் அறிக்கை அனுப்பியதாக வந்த தகவல் வெளியானதே? என்று கேட்டதற்கு அந்த செய்தி பொய்யானது என கவர்னர் மாளிகையே பதில் கொடுத்துள்ளது, இந்த மாதிரி செய்திகளை வெளியில் விடுவது யார் என்று தெரியும் என்றார்.

குழப்பம் ஏற்படுத்த முயற்சி
எங்களுக்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகின்றனர். அதை நன்றாக உணர்ந்தவர்கள் எங்கள் எம்எல்ஏக்கள். அதற்கு உண்டான செயல்களை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்று சசிகலா பதில் அளித்தார்.

சசிகலா கோபம்
ஒரு செய்தியாளர் கேட்ட கேட்டதற்கு எரிச்சலான சசிகலா நீங்க எந்த பத்திரிக்கை என்று கேட்டார். பின்னர் உங்களுக்கு அது பற்றி தெரிந்திருக்குமோ என்னவோ? அதனாலத்தான் அப்படி கேட்கிறீர்களோ என்று கூறினார். ஜெயலலிதா, விஜயகாந்த் பாணியில் கோபத்துடன் கேட்டார். 15 நிமிடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டார் சசிகலா.