சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால்?

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வெளிவரும்; கட்டாயம் தண்டனை பெறுவார்; என்ற யூகத்தின் அடிப்படையில் சசிகலா பதவி ஏற்கக்கூடாது என்று வாதிடும் சட்டமேதைகளும் சமூகமும் வசதியாக ஒன்றை மறந்துவிட்டாகள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

யூகத்தின் அடிப்படையில் சொத்துக் குவிப்பு வழக்கு சசிகலாவிற்கு எதிராகவே வரும் என்று வைத்துக் கொண்டாலும், அந்த வழக்கின் முதல் குற்றவாளியான ‘ஜெயலலிதாவுக்கும்’ அந்த தீர்ப்பு பொருந்தவே செய்யும்.

இந்த அரசும் சமூகமும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்படவிருக்கும் தண்டனையை எப்படி அமல்படுத்தப் போகிறார்கள்?

1. ஜெயலலிதாவின் முதாலாம் ஆட்சிக் காலத்தின் போது நடைபெற்ற குற்றம் இது, ஆக; குற்றவாளி ஒருவர்தான் தமிழகத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்று அரசு அறிவிக்குமா?

2. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவார் என்று தெரிந்தும் பன்னீர் செல்வம் மோடியிடம் ஜெயலலிதாவிற்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தது சரியா? இதைத் தொடர்ந்து வலியுறுத்தப் போகிறாரா?

இனிவரும் காலங்களில் ஜெயலலிதாவிற்கு பட்டங்கள் வழங்குவதைத் தவிர்க்கவும், அரசு பல்கலைக்கழகங்களில் ஜெயலலிதாவிற்கு வழங்கிய பட்டங்களை திரும்பப் பெறவும் அரசு ஆவணம் செய்யுமா?

3. தற்போது அரசுத் திட்டங்களில் உள்ள ஜெயலலிதா ‘அம்மா’ பெயர் நீக்கப்படுமா? இனிவரும் காலங்களில் எந்த ஒரு அரசு திட்டத்திற்கும் ஜெயலலிதா ‘அம்மா’ பெயர் சூட்டக்கூடாது என்று அரசு ஆவண செய்வார்களா?

4. தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படங்களை நீக்க அரசு ஆவணம் செய்யுமா?

5. குற்றவாளி ஒருவர் வாழ்ந்த இல்லத்தை அரசு எப்படி நினைவு இல்லமாக மாற்றலாம்? ஜெயலலிதாவிற்கு நினைவிடம், மணிமண்டபம் போன்றவற்றை அரசு அமைக்காமல் இருக்குமா?

6. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெறுவதால் ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குமா?

குற்றவாளிக்கு தண்டனை என்பது சிறையில் கழிப்பது மட்டுமன்று;
வரலாற்றில் இருந்து அவர் பெயரை நீக்குவதும் கூட தண்டனைதானே.