ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரில் விமான நிலையம் உள்ளது. நேற்று அங்கு ஏர்கண்டிசன் சிஸ்டத்தில் திடீரென ஒருவித நச்சு வாசனை வெளியானது. பின்னர் அது படிப்படியாக விமான நிலையம் முழுவதும் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு பல மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. புறப்பட தயாராக இருந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
நச்சு வாசனை பரவியதால் விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் என 50 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு கண் எரிச்சலும் உருவானது.
எனவே அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நச்சு வாசனை பரவியதை தடுத்து நிறுத்தி சீரமைத்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் விமான நிலையம் செயல்பட தொடங்கியது.