அமெரிக்காவில் இந்திய வாலிபர் மர்மமான முறையில் சுட்டுக் கொலை

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் நகர்புற மாவட்டத்தை சேர்ந்த ஹாசன்பர்தி பகுதியை சேர்ந்த வாலிபர் மமிடாலா வம்ஷி. இவர் அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் மில்பிடாஸ் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்தார்.

இந்நிலையில் வாலிபர் வம்ஷி கலிபோர்னிய மாகாணத்தில் ஒரு மர்மமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. அவர் வசித்து வந்த அப்பார்மெண்ட் வெளியே வாகன நிறுத்துமிடத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்தார்.

இந்தியாவில் உள்ள அவரது பெற்றோர்கள் சஞ்சீவா ரெட்டி மற்றும் ராமா தேவி ஆகியோர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். கார் ஜாக் பெண் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில், “சனிக்கிழமை எங்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட வம்ஷியின் நண்பர்கள் அவனை காணவில்லை என்று கூறினர். பின்னர் வம்ஷி சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்” என்றனர்.

வாலிபர் வம்ஷி பகுதி நேர வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.