பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய பேர் சொல்லும் படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடிப் போனார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த மனிஷா யாதவ், தற்போது தனது காதலரை கரம் பிடித்திருக்கிறார்.
7 வருடங்களாக காதலித்த தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்தேறியுள்ளது. ஆனால், திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் இந்த திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். திரையுலகில் மனிஷா யாதவ்வுக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.