ராகுல்காந்தி பாணியில் எளியவர்களின் வீட்டிற்குள் செல்லும் சசிகலா!

எளியவர்களின் வீட்டிற்குள் சென்று உணவருந்துவதை வழக்கமாக கொண்டவர் ராகுல்காந்தி.

இது அவருக்கு பெரும் ஆதரவை பெற்றுத் தந்தது. இதனால் எதிர்கட்சியினரால் கடுமையாக கிண்டலும் செய்யப்பட்டார். இதே போல், தற்போது சசிகலா ஏழை மக்களின் குடிசைகளுக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கூவத்தூர் ரிசார்ட் பகுதியில் முதல்நாள் அவர் நுழைந்தபோது, கடும் எதிர்ப்பு எழுந்தது. இரண்டாவது நாள் அவர் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டார்.

இன்றோ மக்களின் வீடுகளுக்குள் நுழைந்தார் சசிகலா. சிறுவர்களை கையில் தூக்கி அவர்களுக்கு சாக்லெட் கொடுத்தார். ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் வைத்தார்.