முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், மதுரை தொகுதி எம்.பி.,கோபால கிருஷ்ணனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க தற்போது இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வில் நீடித்து வந்த மௌனத்தை, ஒரே இரவில் கலைத்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இதனால் தமிழக அரசியல் உச்சகட்ட பரபரப்பை அடைந்துள்ளது.
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில், சசிகலா, தினமும் கூவத்தூர் சென்று நம்பிக்கையூட்டி வருகிறார். இருப்பினும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் மனநிலையிலேயே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சசிகலா கோஷ்டி அச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், மதுரை லோக்சபா தொகுதி எம்.பி.,கோபால கிருஷ்ணனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பி.எஸ் அணியில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு. இந்த எண்ணிக்கை விரைவில் உயரக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.