எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக தொடங்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் என முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்கள் இந்த பாகத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரபாஸுக்கும், ராணா டகுபதிக்கும் இடையே நடக்கும் போரில் சமாதான தூதுவராக ஷாருக்கான் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும், படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து இந்த செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.
‘பாகுபலி -2’ வருகிற ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகவிருப்பதாக ஏற்கெனவே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.