`இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தில், வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர் தமிழ் பெண்ணை மணக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அது யார் என்பதை கீழே பார்க்கலாம்.
‘ஹாரி பார்ட்டர்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணிபுரிந்தவர் கிரேக் பியூரிட்ஜ். இவர் தமிழில் தயாராகும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தில், வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க விரும்பும் இவர், “எனக்கு தமிழ் நாடு மிகவும் பிடித்து விட்டது.
தமிழர்களின் கலாசாரமும், பாசமும் என்னை கவர்ந்து விட்டது. ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.