ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி காதலர் தினத்தில் எதிர்பார்ப்பது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரோஜா மலர் ஒன்றை கொடுக்க வேண்டும் என்பதேயாகும் பெருந்தெருக்கல் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவினால் ரோஜா மலர் ஒன்றை கொண்டு சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க வேண்டும் என்பதும் பிறிதொரு எதிர்பார்ப்பாகும்.
அத்துடன், ஒருவருக்கொருவர் ரோஜா மலர்களை பறிமாற்றிக்கொள்வது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்ந்தவர்களின் பிரதான எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பெருந்தெருக்கல் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
நாடு என்ற வகையில நாம் மாற்று விதமாகவே சிந்திக்கிறோம்.
பிற நாடுகளில் அன்னையர் தினம், தந்தையர் தினம், பெண்கள் தினம் என விசேட தினங்களில் மாத்திரம் அவர்களை நினைவு கூறுகிறார்கள்.
ஆனால் இலங்கையில் நாளாந்தம் அந்த தினங்கள் அமுலில் இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.