வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கையை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய நாடுகளின் அரசியல் துறை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் வெளியிட்டுள்ளார்.
உலகலாளவிய ரீதியாக நாடுகளுக்கிடையே பிளவுகள் ஏற்படும் தருணத்தில் இலங்கை வழங்கிய அமைதி காக்கும் பணிகளை அவர் வரவேற்றுள்ளார்.
இதுதவிர, பொது மனிதாபிமான ரீதியாக அவர்கள் செயற்பட்டதாகவும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அனட்டோனியோ கட்டாரிஸ் சார்பாக கலந்து கொண்ட பெல்ட்மன் இதனை குறிப்பிட்டுள்ளார்.