தமது சொந்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்தும் 15 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் ஜனாதிபதியிடம் நடாத்திய கலந்துரையாடலில் “கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிக்கப்பட வேண்டும்” என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் அமைச்சர் சுவாமிநாதன் .
இவ்விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி இராணுவ தளபதியிடம் வினவியபோது கேப்பாப்புலவு மக்களுக்கு சொந்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளதாகவும் இதை தொடர்ந்து இம் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.