இலங்கையை தீவி­ர­மாக அச்சுறுத்தும் மூளைக்­காய்ச்சல்!

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மூளைக்­காய்ச்சல்  தீவி­ர­மாகப் பர­வி­வ­ரு­வ­தாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்­திய அதி­கா­ரிகள் இது தொடர்பில் பொது மக்களுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்.

இது­வரை 11 பேர் இந்­நோய்க்கு உட்­பட்­டுள்­ள­தா­க தெரிவிக்கப்படுகின்றது.

பலாங்­கொடை காவத்தை குரு­விட்ட எல­பாத்த பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்­களே இந்­நோய்க்கு உள்­ளா­கி­யுள்­ள­னர்.

இவர்­க­ளுக்­கான சிகிச்­சைகள் வழங்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இரத்­தி­ன­புரி மாவட்ட வைத்­திய அதி­காரி சம்பத் ரண­வீர தெரி­வித்தார்.

இந்­நோய்க்கு உட்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் நோயா­ளர்­களின் இரத்தம் இரத்தப் பரி­சோதனை நிலை­யத்­துக்கு அனுப்பிவைக்­கப்­பட்டு நோய் உறுதி செய்­யப்­படும் பட்­சத்தில் இவர்களுக்கு விசேட வைத்­திய பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.

இந்நோய் பன்­றி­க­ளா­லேயே பரப்­பப்­படு வதனால் பன்­றிப்­பண்­ணை­க­ளுக்கு அண்­மித்து வசிப்போர் அவ­தா­ன­மாக இருக்­க வேண்டு மெனவும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

சுமார் ஒரு தசாப்த காலத்துக்கு முன் இப்பகுதியில் பரவிய இந்நோயால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.