தமிழ் மக்களின் உரிமைகள் சலுகைகள் வேகமாக அழிக்கப்பட்டுவர தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதானியாக செயல்பட்டு வருகின்றது அக்கட்சியில் இணைந்துள்ள ஏணைய கட்சிகளை தவிர்த்து தன்னிச்சையான முறைகளில் கூட்டமைப்பின் தலைமை செயல்பட்டு வருவதால் சாதாரண தமிழ் பொது மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர்களின் கலாச்சாரங்கள் துரித வேகத்தில் அழிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் இருக்கின்ற போதும் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது தனித்தே தலைமைகள் முடிவெடுத்து தமிழ் மக்களை அழிவிற்கு கொண்டு செல்லுகின்றது எனவே த.தே.கூ தலைமைப்பொருப்பில் இருந்து இவர்கள் ராஜினாமா செய்வதே இப்பொழுது இவர்களுக்கு பொருத்தமாகும். இவ்வாறு தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.