சிங்கள மக்களைப்போல் சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் அரசு..!

சிங்கள மக்களைப் பாதுகாப்பதைப் போன்று சிறுபான்மை மக்களையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்று வீதி அபிவிருத்தி மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த அரசு 20 வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதும் அதனைவிடச் சிறந்த சேவைளை தற்போதைய நல்லாட்சி அரசு செய்துள்ளது.

பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்ளை மேற்கொண்டுள்ளது. கண்டி – கொழும்பு மத்திய நெடுஞ்சாலை காரணமாக இலங்கையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

இவ்வீதி அமைக்கப்பட்டதும் கண்டியில் இருந்து கொழும்புக்கு ஒரு மணித்தியாலத்தில் செல்லக் கூடியதாக இருக்கும். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும், தமிழ் இந்துக்களுக்கும் பாரிய பிரச்சினைகள் இருந்தன.

சிங்கள பௌத்த மக்களைப் பாதுகாப்தைப் போன்று சிறுபான்மை மக்களையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

ஆகவே, எங்கள் அரசில் சிங்கள மக்ளைப் போன்ற சலுகைகளையும் உரிமைகளையும் ஏனைய இனங்களுக்கும் வழங்குவோம். சகல விடயங்களிலும் சம உரிமை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.