எனது அரசியல் பிரவேசம் தொடங்கியது.. ஓ.பி.எஸ்ஸுடனான திடீர் சந்திப்புக்குப் பின் தீபா!

தனது அரசியல் பிரவேசம் இன்று முதல் தொடங்குவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா தெரிவித்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தானும் அதிமுகவின் இரு கரங்களாக செயல்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வ இன்று இரவு திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அவர் அங்கு சென்று சேர்ந்த 5வது நிமிடம் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா அங்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெ.தீபாவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தீபா அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, எனது அரசியல் பிரவேசம் இன்று முதல் தொடங்குகிறத. நானும் முதல்வரும் அதிமுகவின் இருகரங்களாக செயல்படுவோம், என்றார்.

மேலும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெ.தீபா, சசிகலா செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கிறார் என்றார்.