தான் சிறைக்கு சென்றாலும் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு மற்றும் சொத்துக்களை அரசுடைமையாக்கமால் கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரையும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டனர்.
சொந்தம் எதுவும் இல்லாத நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றவே அவருடன் சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டி தங்கிருந்ததாகவும் நீதிபதிகள் சவுக்கடி கொடுத்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சிறைக்கு செல்ல உள்ள சசிகலா ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதை தடுக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு தூபம் போட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துக்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் ஆதரவாளர்களை சீண்டி விட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு என வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில் அவரின் சொத்துக்களை கைப்பற்றி அதனை சசிகலா குடும்ப சொத்துக்களாக மாற்றவேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு பேசியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவத்துள்ளனர்.