இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் 23-ந்தேதி புனேயில் நடக்கிறது. இந்த தொடருக்காக ஆஸ்திரேலியா அணி நேற்று இந்தியா வந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேச அணிக்கெதிராக விளையாடிய அதே அணிதான் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இடம்பெறாமல் இருந்த மொகமது ஷமி மற்றும் ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. முரளி விஜய், 3. லோகேஷ் ராகுல், 4. புஜாரா, 5. ரகானே, 6. சகா, 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. இசாந்த் ஷர்மா, 10. புவனேஸ்வர் குமார், 11. உமேஷ் யாதவ், 12. கருண் நாயர், 13. ஜயந்த் யாதவ், 14. குல்தீப் யாதவ், 15. அபிநவ் முகுந்த், 16. ஹர்திக் பாண்டியா.
வங்காளதேச டெஸ்டிற்கு தகுதிபெறாத அமித் மிஸ்ராவும் அணியில் இடம்பெறவில்லை.